இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

63

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு ஜாதகர் முன்ஜென்ம வினைப் பயனால் இவ்வுலகில் பிறவியெடுக் கிறார். ஜாதகத்தில் சனியின் அமைப்பே, வினைப்பயனைச் சுட்டிக்காட்டும். சனி அமர்ந்திருக்கும் பாவமும், சனியுடன் மற்ற கிரகங்களின் தொடர்புமே ஜாதகர் இந்தப் பிறவியில் பெறப்போகும் இன்ப, துன்பங்களை நிர்ணயிக்கும். அஷ்டவர்க்கப் பலனில் சனி, முப்பத் தொன்பது சுபவர்க்கப் பலன்களையும், ஐம்பத்தேழு அசுபவர்க்கப் பலன் களையும் சேர்த்து மொத்தத்தில் தொன்னூற்றாறு வர்க்கப் பலன்களைத் தருகிறார். சனியுடன் சூரியன் கூடினால் சொந்த வீடு, வாகன யோகங்கள் உண்டாகும். சனியின் சுபவர்க்கங்களில் அமையும் பாவங்களும், கிரகங்களும் சுபப் பலன்களையே தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

kk

""ஞானவடிவே! அஷ்டாங்க யோகத்தில் சமாதி நிலையை அடையும் முக்தர்களின் அனுபூதி நிலையினை, அறிவில் எளியோரும் அறியும்வண்ணம் எடுத்துரைக்க வேண்டுகிறேன்'' என அன்னை முருகுவளர்க்கோதை, குருமானக்குடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு கண்ணாயிரநாதரைப் பணிந்து கேட்டாள்.

ஞானகுரு உரைத்தது- ""மூலாதாரத்து புற்றி டைப் பாம்பு சீறியெழுந்து, சிரசைத் தாண்டி சஹஸ்ராரம் பற்றினால் சாதகன் சித்தனாவான்.

Advertisment

அவனுக்கு வாதமும் சிலேஷ்மமும் பித்தத்தில் ஒடுங்கும். உலகோர் அவனைப் பித்தன் என்பார்.

சித்தம் தெளிந்தவர் சித்தரென்பார். முற்றிய வேம்பின் பால் இனிப்பதுபோல, நாகம் தீண்டி யோருக்கு சுவை மாறுவதுபோல முக்தர்களுக்கு வேம்பு இனிக்கும்; அடிக்கரும்பு கசக்கும். சங்கும் முரசும் செவிதனில் ஒலிக்க, அசபை (அந்தரங்கம்) தன்னில் ஆடல் காண்பார். யோக நித்திரையில் தொலையுணர்தல் வாய்க்கும். தன்னை அணுக் களாய்ப் பிரித்து, பிரபஞ்சம் முழுவதும் வியா பிப்பார். யுகப்பிரளயம்வரை கால, தேசக் கணக் கின்றி எங்கும், எப்போதும் சிரஞ்சீவியாய் ஜீவித் திருப்பார். பஞ்சபூதமும் அவரை அடிபணிந்தே செயலாற்றும்.''

""பசுபதிநாதரே! "க்ராநதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், திருவோணம் மூன்றாம் பாதத்தில் சனியும், சதயம் நான்காம் பாதத்தில் புதனும், பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சூரியனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், திருவாதிரை முதல் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருமங்கலக்குடி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீபிராண நாதேஸ்வரரை அன்னை மங்களாம்பிகை வினவினாள்.

Advertisment

மாதொருபாகன் உரைத்தது- ""மாதரசியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் பாலன் எனும் பெயருடன் கோகர்ணம் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். இளம்வயதில் அக்னி சாட்சியாய், தன் வாழ்க்கைத்துணையை ஏற்றான்.

தன் மனைவியை போகப்பொருளாகவே நோக்கினான். அவளைக் கொடுமைப்படுத் தினான். அந்த துன்பத்தால் அவள் மனநோயுற் றாள். காலத்தின் காட்சியால் பாலன் விருத் தனானான். முதுமையில் அவன் உடலைவிட்டு தனஞ்செயன் நீங்கினான். உயிர் நரகம் சென்றது.நரகவாசம் கழிந்தபின், பொதிசுமந்த கழுதைபோல, பாவமூட்டை களைத் தலைச்சுமையாய்த் தாங்கி பூவுலகம் வந்துசேர்ந்தான். செட்டியூர் எனும் ஊரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதில் மாலைக்கண் நோயால் அவதியுறுகிறான். முற்பிறவியில் வாழ்க்கையின் கண் போன்ற தன் கண்ணாளை (மனைவி) கொடுமைப்படுத்தியதால், துன்பத்தின் இருளில் மூழ்கினான். செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும் செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களை மதிக்கவேண்டும். பெண்களால் சபிக்கப்படு பவர்கள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப் பட்டதைப்போல அழிந்து நிர்மூலமாவார்கள். * ஸ்வேத கேதுவைப்போல பெண்ணின் அருமைபெருமைகளை உணர்ந்திருந்தால், அவனுக்கு இந்த கதி நேர்ந்திருக்காது. இதற்குப் பரிகாரமாக நூற்றெட்டு சுமங்கலிப் பெண் களைப் பூஜித்து, அன்னதானமும் சொர்ணதானமும் செய்தால் பிணி நீங்கி நலம்பெறுவான்.

* "ஸ்வேத கேது- வேதகாலத்தில் பெண்ணுரிமை, பெண்ணின் பெருமைகளை உபநிடதங்கள்மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.

(வளரும்)

செல்: 63819 58636

___________

நாடி ரகசியம்

1. உத்திர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் குருவும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர் ஜோதிட நிபுணராவார்.

2. உத்திர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் குருவும், மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகர் அரசியலில் மேலிடத்தைப் பெறுவார்.

3. உத்திர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும் சந்திரனும் கூடியிருந்து, உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் சனியும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவரின் வாழ்வில் போராட்டமும் ஆபத்தும் தொடரும்.

கேள்வி: பிரசன்ன ஆரூடத்தின் முக்கியத்துவத்தை "கந்தர்வ நாடி' மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஒருவருக்கு ஜனனகால விவரங்கள் தெரியாமலிருந்தால் கணிக்கப்படும் நஷ்ட ஜாதகத் திலும், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் விடையறிய விரும்பினாலும் பிரசன்ன ஆரூடத்தின்மூலம் பலன் காணலாம். கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பிரசன்ன ஆரூடம் கணிக்கும் இடத்தில் உதயமாகும் லக்னமே பிரதானமானது. உதாரணமாக, ஒரு காரியம் நிறைவேறுமா என்று கேட்கப்படும் கேள்விக்கு, பிரசன்ன காலத்தில் உதயமாகும் லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் வளர்மதியும் (வளர்பிறைச் சந்திரன்) லக்னாதிபதியும் கூடியிருந்து, குரு அல்லது யோகாதிபதிகளால் பார்க்கப்பட்டாலும்; லக்னத்தில் லக்னாதி பதியும் பத்தாம் பாவாதிபதியும் கூடிநின்றாலும் காரியம் நிறைவேறும். லக்னாதிபதிக்கும், பத்தாம் பாவாதிக்கும் நேரடித் தொடர்போ பார்வையோ இல்லாமல் போனால் காரியம் நிறைவேறாது. கர்மஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவமும், பிரசன்ன லக்னமுமே பலன்களை முடிவுசெய்யும். பிரசன்ன லக்னத்தின் அதிபதியும் பத்தாம் பாவாதிபதியும் எந்தெந்த பாவங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால் காரியம் நிறைவேறும் காலத்தையும், தன்மையையும் அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.